வவுனியா அரச அதிகாரியின் ஊழல்

Date:

வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி ADP ராகினி ஜெயராஜ், அனுமதி காணி ஒன்றின் போலி ஆவணத்தை உருவாக்கி 24 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவின் போமிட் பகுதியில் உள்ள அனுமதி காணி ஒன்றை, சில வருடங்களுக்கு முன் போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்ததையடுத்து, விசாரணைகள் தொடுக்கப்பட்டன.

விசாரணையின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட வவுனியா மாவட்ட செயலக அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் முடிந்தவுடன் குறித்த அதிகாரியை நீதிமன்றத்தில் முற்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்! 2027 முதல் நெருக்கடி ஏற்படலாம் என எச்சரிக்கை

அரசாங்கத்தின் தற்போதைய மின்சக்திக் கொள்கைகள் தொடருமானால், 2027ஆம் ஆண்டு முதல் இலங்கையில்...

பிரபாகரன் வீட்டு காணிக்குள் கலாச்சார மண்டபம் கட்டப் போகிறோம்!

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டு காணிக்குள்...

பட்டாசு வெடித்து இளைஞன் பலி

வீரக்கெட்டிய பகுதியில், 'பிரித்' (பௌத்த பாராயண) நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீடொன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்