COVID 19 விதிமுறைகளை மீறி இராணுவத்தினரின் ஏற்பாட்டில் குருந்தூர்மலையில் இரவிரவாக நடைபெறும் பிரித் ஓதல்: நாளை விகாரை அமைப்பு பணி ஆரம்பம்!

Date:

அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கோவிட் 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

குருந்தாவ அசோக புராதன பௌத்த விகாரை சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று இரவிரவாக பூசைகள் இடம்பெற்று பௌத்த விகாரையை புதிதாக அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தெற்கிலிருந்து வருகைதந்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பொலிஸாருக்கு மாவட்ட நிர்வாக தரப்பினருக்கோ சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்த படாமல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பெருமளவான பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து குறித்த சமய நிகழ்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஒன்றுகூடுவதற்க்கோ வழிபாடுகளை ஒன்றுகூடி மேற்கொள்வதற்க்கோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரச நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இரவோடு இரவாக சுகாதார தரப்பினரின் எந்தவித அனுமதிகள் எவையும் பெறப்படாது குறித்த பௌத்த அனுட்டான நிகழ்வு பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தலைமை படை அதிகாரி மற்றும் பௌத்த பிக்குகள் 29 பேர் , தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து பெரும் எடுப்பில் தோரணங்கள் கட்டி , அலங்காரங்கள் பந்தல்கள் என வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.

குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் வெளிப்படை தன்மை பேணப்படாது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் திடுதிப்பென பெரும் எடுப்பில் பௌத்த வழிபாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பலத்த சந்தேகத்தினை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்