வடமாகாணத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று (2) வடக்கை சேர்ந்த 470 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. அதில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்- நல்லூர் வீதியில்- உயிரிழந்த 84 வயதான மூதாட்டியெருவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.
யாழ்ப்பாணத்தில் பதிவான 7வது கொரொனா மரணம் இதுவாகும்.
அதுதவிர,சாவகச்சேரி பொதுச்சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்றான சோதனையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த ஒருவரும், யாழ் போதனா வைத்தியசாலையில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
+1
1