26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

காலங்கடந்த கல்விக் கொள்கையினால் நவீன உலகுடன் முன்னோக்கி செல்ல முடியாத உலகமே உருவாகும்!

டிஜிடல் தளம் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து “பேண்தகு கல்விக் கொள்கை சட்டகமொன்றை” உருவாக்குவதற்கு மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் ஒன்றாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

“ஒரு நாட்டின் சிந்தனை மற்றும் தெலைநோக்கு உருவாகுவது அந்நாட்டு கல்விக் கொள்கையின் மூலமே ஆகும். காலங்கடந்த கல்விக் கொள்கையினால் உருவாவது நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்வதற்கு முடியாத சமூகம் ஒன்றாகும். பரந்தளவிலான மக்கள் பிரதிநிதித்துவத்துடன் உருவாகும் ஒரு கொள்கையைஅரசாங்கம் மாறும்போது மாற்​ முடியாது” என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் அறிவை மையப்படுத்திய மனித வள மூலதனத்தை திட்டமிட்டு போசிப்பது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதற்காக பல்வேறு கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்கால சமூகத்தை அறிவு, திறன்களுடன் கூடிய சமூகமாக உலகுக்கு கொண்டு செல்ல “ புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் ” தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு பற்றி பொதுமக்களி்ன கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான டிஜிடல் தளத்தை உருவாக்குவதற்காக நேற்று (26) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“அறிவையும் மனதையும் போஷிக்கும் முழுமையான கல்வியைநோக்கி“ என்பது டிஜிடல் தளத்தின் கருப்பொருளாகும்.

டிஜிடல் தளம் ஜனாதிபதி அவர்களினால் உத்தியோகபுர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இன்று முதல் அடுத்து வரும் 03 மாதங்கள் egenuma.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் மக்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை  டிஜிடல் தளத்துக்கு அனுப்ப முடியும். முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி , தொழில் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, உயர் மற்றும் தொழிற் கல்வி என்ற பிரதான 04 உப துறைகளின் கீழ் மறுசீரமைப்பு ஆலோசனைகள் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு. பேண்தகு கல்விக் கொள்கை ஒன்றுக்காக மிகவும் பரந்தளவில் பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு டிஜிடல் தளம் திறக்கப்பட்டுள்ளது.

உயர் கல்விக்கு பிரவேசிப்பதற்கு அதிக வாய்ப்புக்களை வழங்குவது மறுசீரமைப்பின் மற்றொரு நோக்கமாகும். பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன் மறுசீரமைப்பின் மூலம் தொழில் திறன் விருத்தி, தொழிலில் ஈடுபடும்போது தமது கல்வித் தகைமைகளை விருத்தி செய்துகொள்வதற்காக திறந்த பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையான மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் முன்பள்ளி முதல் முழுமையான கல்வியை வழங்குவது தமது எதிர்பார்ப்பாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இணையம் மற்றும் தொழிநுட்ப குறைபாடுகளை 2023 வருடமாகும்போது முழுமையாக நீக்குவதாகவும் குறிப்பிட்டார்.

கீர்த்திமிக்க வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை தேசத்துக்காக அதனை விடவும் கீர்த்திமிக்க எதிர்காலத்தை கட்டயெழுப்புவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

மகா சங்கத்தினர், ஏனைய மதத்தலைவர்கள், அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், நாமல் ராஜபக்ஷ, மேல் மாகாண ஆளுனர் மாஷல் ஒப் த எயார் போஸ் ரொஷான் குணதிலக, கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத், இராஜாங்க அமைச்சர்களான சீதா அரம்பேபொல, விஜித பேருகொட, டீ. வீ சானக, ஆகியோருடன் தூதுவர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். உபாலி சேதர, அரச அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

பணிப்பகிஷ்கரிப்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

east tamil

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment