காணாமலாக்கப்பட்டோருக்கான பரிகார கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் கொடுத்து விட்டேன்!

Date:

வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கலந்துரையாடியதற்கிணங்க மூன்று கோரிக்கைகள் மற்றும் பரிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்துள்ள நிலையில் எவ்வகையான முன்னெடுப்புகள் தொடர்பில் கருத்து கூறுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உறவுகளை சந்தித்த அவர்களுக்கு இவ்வகையான பரிகாரங்களை முன்னெடுக்கலாம் என குழு ஒன்றின் மூலம் தீர்மானங்களை எடுத்திருந்தோம்.

இராணுவத்தினரால் காணாமலாக்கப்பட்டோர், விடுதலைப்புலிகளால் காணாலாக்கப்பட்டோர், மற்றும் தெரியாதவர்களால் காணாமலாக்கப்பட்டோர் என மூன்று பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது? என்ற விடயத்தை தெளிவு படுத்தல் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பொறுப்பில்லாத கடன்களை ஏற்படுத்துதல், வீட்டுத்திட்டம் மற்றும் அரச வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய சிபார்சுகளை உள்ளடக்கிய எழுத்து மூல ஆவணம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியை விரைவில் சந்தித்து தீர்வொன்றைக் காண்பதற்கு எண்ணியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்