குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

Date:

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரியின் தலைமையில், பொலிஸ், இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து இன்று (27) சுமார் இரண்டு மணிநேரம் தீவிர சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இந்த சுற்றிவளைப்பு பிற்பகல் 5.30 மணிக்கு ஆரம்பமாகிய இச்சுற்றிவளைப்பின் போது எவரும் கைது செய்யப்படவில்லை.

கசிப்பு உற்பத்தி மற்றும் அதனால் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, அப்பகுதியில் நிலவும் சட்டமிரண்டியல் பிரச்சினைகளை கட்டுப்படுத்தவே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மாளிகைத்திடல் பகுதியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்ததனால், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலில் இருவர் காயமடைந்ததுடன், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை மேலும் இருவர் கசிப்புடன் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சுற்றிவளைப்பின் போது, அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இராணுவத்தினர் அங்கு ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், அம்பன் கிழக்கு மற்றும் கொட்டோடை பகுதிகளிலும் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்