விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை பெற்றதைத் தொடர்ந்து, திடீரென நெஞ்சு வலி மற்றும் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் படிக்கட்டுகளில் ஏறும்போது கூட மூச்சுத் திணறல் ஏற்படுவதாகக் கூறி நவலோகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்; கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் தனக்கு அவசர இதய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பின்னர், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சை பெற வேண்டியிருப்பதாகக் கூறி அவர் வெளிநாடு சென்றார்; இருப்பினும், சிங்கப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அவர் தடையின்றி உலாவருதைக் காட்டும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட அந்தப் புகைப்படங்கள், சிங்கப்பூரின் ஓர்ச்சர்ட் சாலையில் (Orchard Road) அமைந்துள்ள ‘313@somerset, Orchard Rd, Singapore 238895’ என்ற புகழ்பெற்ற வணிக வளாகத்திற்கு அருகில் எடுக்கப்பட்டவை. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, ​​அவர் தனது உடல்நலக்குறைவிலிருந்து முழுமையாக மீண்டிருந்ததாகத் தெரிந்தது; இதயப் பிரச்சனை அல்லது சமீபத்திய அறுவை சிகிச்சைக்கான எந்த அறிகுறியும் அவரிடம் காணப்படவில்லை.

அவர் ஓர்ச்சர்ட் சாலையில் சுறுசுறுப்பாக நடந்து செல்வதையும், லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton) போன்ற உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளின் பொருட்களைப் பார்வையிடுவதையும் அப்புகைப்படங்களைப் பதிவேற்றிய நபர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘உயிருடன் திரும்புவது சாத்தியமற்றது’: பாகிஸ்தான் சிறைக்கொடுமைகளை அம்பலப்படுத்திய இம்ரான் கானின் கடிதம்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் பிடிஐ (PTI) கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான...

திருமலை நீதிமன்றத்தில் கஸ்ஸப தேரர் தெரிவித்தவை!

கடலோரப் பகுதியில் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பான வழக்கொன்றில், திருகோணமலை நீதவான்...

நிதி முறைகேடு குற்றச்சாட்டில் தொழிற்சங்கவாதி ஆனந்தபாலித கைது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 3.11 மில்லியன் ரூபா பெறுமதியான மேலதிக நேரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்