மூத்த அரசியல் போராளியும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் காலமானார்.
நேற்று (14) இரவு 11.35 மணிக்கு, வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானார்.
அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்திருந்த நிலையில், அண்மையில் கொழும்பு நவலோகா மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். அது வெற்றியளிக்கவில்லை.
இதை தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகியிருந்தது.
அந்த வைத்தியசாலையிலும், யாழ்ப்பாணம் நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனையிலும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலையை சீராக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் பின்னர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அங்கும் வைத்தியர்கள் கைவிரித்த நிலையில், சிவாஜிலிங்கம் கடந்த 3 நாட்களாக வீட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.




