லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்வு!

Date:

லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் தனது வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விலைத் திருத்தம் நவம்பர் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய வழக்கமான வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 4,965 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இந்த சிலிண்டரின் புதிய விலை தற்போது 6,740 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அதேபோல், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னர் 1,988 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 2,720 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள லாஃப்ஸ் நிறுவனம், சர்வதேச சந்தையில் திரவப் பெற்றோலிய வாயுவான (LPG) விலைகள் அதிகரித்துள்ளமையைக் கருத்தில் கொண்டே இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வால் வீட்டு உபயோகத்திற்காக லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் நுகர்வோர் கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

டரம்ப், புடின், ஷி சந்திப்பை உறுதி செய்த ரஷ்யா

வரும் வாரத்தில் ஷென்செனில் நடைபெறும் உச்சிமாநாட்டில், ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனாவின்...

மட்டக்களப்பில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்

மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை...

விண்வெளியில் இருந்து திரும்பிய Starship! இயந்திரக் கரங்களால் பிடித்து சாதனை படைத்த SpaceX!

விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய தனது Starship விண்கலத்தை, ஏவுதளத்திலேயே பொருத்தப்பட்டிருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்