காயத்தால் அவதி: விம்பிள்டன் அரையிறுதியிலிருந்து விலகினார் நடால்!

Date:

நடப்பு விம்பிள்டன் தொடரின் ஒற்றையர் ஆடவர் பிரிவு அரையிறுதி போட்டியில் விலகியுள்ளார் டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரர் ரபேல் நடால். காயத்தால் அவதிப்பட்டுவந்த அவர், அதில் இருந்து மீளாத நிலையில் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, காலிறுதியில் அவர் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிராக விளையாடி இருந்தார். இந்த போட்டியில் நடால் 3-6, 7-5, 3-6, 7-5, 7(10)-6(4) என்ற செட் கணக்கில் ஆட்டத்தை வென்றார். சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியின் உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் இருந்து விலகும்படி அவரது அணியினர் வற்புறுத்தியதை போட்டி முடிந்ததும் வெளிப்படுத்தி இருந்தார் நடால். அதேபோல், “நான் அரையிறுதியில் விளையாடுவேனா என தெரியவில்லை” என்றும் பேசியிருந்தார்.

நாளை அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் எதிர்த்து அரையிறுதியில் விளையாட உள்ள நிலையில், சிலமணிநேரம் முன்பு இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடால் விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பின்போதே மிகவும் சோர்வாக காணப்பட்ட நடால், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

36 வயதான நடால், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மொத்தம் 22 முறை பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். டென்னிஸ் உலகில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் நடால். நடப்பு அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடரின் சாம்பியனும் அவர் தான்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்!

யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார். இளவாலை பொலிஸ்...

முல்லைத்தீவில் என்.பி.பி பிரமுகரின் விடுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான...

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்