ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

Date:

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ் ரக போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய, நேற்று (25) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு இடையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிக்குவின் பயணப் பொதியிலும் தலா 5 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் ஒருவரின் அனுசரணையில் கடந்த 22ஆம் திகதி தாய்லாந்து சென்றிருந்த நிலையில், அங்கு அவர்கள் சாதாரண உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களின் கைபேசிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.

அவர்கள் நேற்று (25) இரவு 10.10 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து தாய் ஏர்ஏசியா விமானம் FD-140 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் இதுவென்பதுடன், பௌத்த பிக்குகள் குழுவொன்று இவ்வாறு கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் உயர் கல்வி கற்கும் இளம் பிக்குகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற வெள்ளாடுகள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்