மாணவர்கள் குடை பிடித்துக் கொண்டு பரீட்சை எழுதியது தொடர்பாக விசாரணை!

Date:

நேற்று மழை பெய்த சமயத்தில் கம்பஹா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் வெள்ளம் மற்றும் மழைத் தூறல்களின் மத்தியில் வகுப்பறையில் சாதாரண தர மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியமை தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

பரீட்சைக்கும் தோற்றிய மாணவர்கள் குடை பிடித்தபடி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

துரித நடவடிக்கை எடுத்து பரீட்சை மண்டபத்தை மாற்றாதது, பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறையிடாதது  குறித்து பரீட்சைகள் திணைக்களம் மூலம் விசாரணை நடத்தப்படும்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்