எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவையில்லாமல் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய கடன் வரியின் கீழ் மேலும் மூன்று கப்பல்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டை வந்தடைய உள்ள நிலையில், டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று வந்துள்ளது.
போதுமான எரிபொருள் இருப்பு இருக்கும் என அமைச்சர் விஜேசேகர ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அனைத்து 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கும் எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு முடியும் வரை வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.




