ரம்புக்கனை புகையிரத நிலையத்தை அண்மித்த போராட்டத்தை கலைப்பதற்காக ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் வௌியிட்ட அறிக்கையில்,
புகையிரத போக்குவரத்தை சீர்குலைத்து, புகையிரத ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை மன்னிக்க முடியாது.
எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொள்ளும்போது பொதுமக்களின் விரக்தி மற்றும் கோபம் நியாயமானது.
செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நியாயமானதும் வெளிப்படையானதுமான விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென நம்புவதாக இலங்கை நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.




