அமெரிக்க நாடாளுமன்றத்தில் 9 பேரைக் கடித்த நரி கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.
நரி கடித்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர், செய்தியாளர் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
வெறிநாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் எனப்படும் நோய் அந்த நரிக்கு இருப்பதாகத் தெரியவந்தது.
அதனையடுத்து அந்த நரியின் மூன்று குட்டிகளும் கருணைக்கொலை செய்யப்பட்டன.
நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த நரிகளை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு குடியிருப்பாளர்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (4) அந்த நரி பற்றிய முறைப்பாடுகள் மக்களிடமிருந்து வரத் தொடங்கின.
அடுத்த நாள் அதைப் பிடித்த காவல்துறை அதற்கு ரேபிஸ் நோய் இருப்பதை உறுதிசெய்தது.
அதன் குட்டிகளும் நோய்க்கு ஆளாகியிருக்கலாம் என்பதால் நேற்று முன்தினம் (7) அவையும் கருணைக்கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
நரியால் கடிபட்ட அனைவரையும் தொடர்புகொள்ளும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.




