100 மில்லியன் ஆண்டுகளிற்கு முந்தைய பறக்கும் விலங்கின் எலும்புகள் கண்டுபிடிப்பு!

Date:

அடகாமா பாலைவனத்தில் சுற்றித்திரிந்த புராதன, அரியவகை பறக்கும் விலங்கின் பாதுகாக்கப்பட்ட எலும்புகளைக் கண்டுபிடித்திருப்பதாகச் சிலியின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அவை 100 மில்லியன் ஆண்டுகளிற்கும் அதிக பழைமையானவை என்று கூறப்படுகிறது.

அவை டைனோசர்களுடன் வாழ்ந்த டெரோசர்ஸ் எனும் பறக்கும் விலங்கின் எலும்புகள் என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவை டைனோசர்களைப்போல நீண்ட இறக்கைகளைக் கொண்டிருந்ததாகவும், நீண்ட மெல்லிய பற்களைக் கொண்டு தண்ணீரை உறிஞ்சிக் குடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய கண்டுபிடிப்பு மிக அரிது என்பதால் இது அனைத்துலக அளவில் முக்கியத்துவம் பெறும் என்று நம்பப்படுகிறது.

கண்டுபிடிப்பால் டெரோசர்ஸின் உடற்கூற்றை மட்டுமின்றி, அதன் வழக்கங்களையும் ஆராய முடியும்.

இதில் மற்றோர் ஆச்சர்யம் இதன் எலும்புகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட விதம்.

பெரும்பாலும் இத்தகைய எலும்புகள் தட்டையாக, உடைந்த நிலையில் காணப்படும். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பில் முப்பரிமாண வடிவில் பாதுகாக்கப்பட்ட எலும்புகள்கூட கண்டெடுக்கப்பட்டதாய் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்