4 வருடங்களாக பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை: விசாரணை நடத்த உத்தரவு!

Date:

மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியையிடம் விசாரணை நடத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நேற்று உத்தரவிட்டார்.

20 வயதுடைய மாணவனை, குறிப்பிட்ட ஆசிரியை 16 வயது முதல் தனது பாலியல் தேவைகளுக்காக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு ஆசிரியையாக கடமையாற்றும் பெண், கல்கிசையில் உள்ள பாடசாலை வளாகம் மற்றும் ஹோட்டல் உட்பட பல்வேறு இடங்களில் நான்கு வருடங்களாக மாணவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாடசாலையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் போது அந்த ஆசிரியையும், மாணவனும் சந்தித்ததாகவும், கல்விப் பணிகளுக்கு உதவுகின்றேன் என்ற போர்வையில் தனது தொலைபேசி இலக்கத்தை மாணவனுக்கு கையளித்துள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வாட்ஸ்அப் மூலம் மாணவனுடன் உறவைப் பேணி வந்ததாகவும், 18 வயதை அடையும் வரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் நடத்தை மேற்கோள் காட்டி தற்போது அந்த ஆசிரியை பாடசாலையிலிருந்து விலகி விட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்