பா.ஜ.கவில் இணைந்தார் காளி!

Date:

மல்யுத்த வீரரான ‘தி கிரேட் காளி’ பாஜகவில்  இணைந்தாா். நேற்று (10) வியாழக்கிழமை பாஜக அவர் பாஜக உறுப்புரிமையை பெற்றார். 3 மாதங்களின் முன்னர் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்த அவர், இப்போது பாஜகவில் இணைந்ததை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

பஞ்சாபை சேர்ந்த தலிப் சிங் ராணா தொழில்முறை மல்யுத்த வீரராக ‘தி கிரேட் காளி’என்ற பெயரில் போட்டியிட்டு வந்தார்.

பஞ்சாப் மாநில காவல் துறையில் பணியாற்றியுள்ளாா். ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள அவா், பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பஞ்சாபில் வரும் 20ஆம் திகதி தோ்தல் நடைபெறவுள்ளது.

புது தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பாஜக உறுப்பினராக இணைந்தாா்.

இது தொடா்பாக காளி கூறுகையில், ‘பாஜகவில் இணைந்தது மிகழ்ச்சி அளிக்கிறது. பிரதமா் மோடி நாட்டுக்கு ஆற்றும் பணிகளை அவரை சிறந்த பிரதமராக அடையாளம் காட்டியுள்ளது. எனவே, அவரது கட்சியில் இணைந்து தேசத்துக்குப் பணியாற்ற முடிவு செய்துள்ளேன்’ என்றாா்.

கடந்த 2020 ஆம் ஆண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு காளி ஆதரவு தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தலிப் சிங் ராணா, நடந்த வருடம் நவம்பரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து ஆம் ஆத்மி கட்சிக்கு  தனது ஆதரவை வழங்கினார். கல்வி, சுகாதாரம், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு ஆற்றி வரும் பணிகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தொழில் முறை நடைபெறும் மல்யுத்தப் போட்டியில் (டிபிள்யு. டபிள்யு.எஃப்.) கடந்த 2000-ஆம் ஆண்டில் அறிமுகமான காளி, ஒருமுறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளாா்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...

சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான...

விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்