சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

Date:

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜாவும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த வாரத்தில் என்னுடன் யாரேனும் தொடர்பில் இருந்திருந்தால் உடனடியாக அவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்