மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளாலும் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
புதிய வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிச் சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மாவீரர் துயிலுமில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமானவர்கள் நினைவாக வருடம் தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டு வருகின்றது
கார்த்திகை 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி செய்வதையும் தடுப்போம் என கங்கணம் கட்டியுள்ள அரசு, பொலிசார் ஊடாக நீதிமன்ற தடைகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




