ஐ.நாவின் முக்கிய அதிகாரி இலங்கை வருகிறார்!

Date:

ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களத்தின்  உதவிப் பொதுச் செயலாளர் காலித் கியாரி தனது முதல் விஜயத்தை 2021 நவம்பர் 23 முதல் நவம்பர் 25 வரை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளார்.

அவர் இலங்கையின் முக்கிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், மதத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திர சமூகத்தின் பிரதிநிதிகளை சந்திப்பார்.

இந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்ததைத் தொடர்ந்து, கியாரியின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

துனிசியாவை சேர்ந்த கலீத் கியாரி, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான அரசியல் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கான உதவிப் பொதுச் செயலாளராக மே 2019 இல் பதவியேற்றார்.

அதற்கு முன், கியாரி துனிசிய வெளியுறவு அமைச்சகத்தில் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியாவின் பொது இயக்குநராக இருந்தார். அவர் இராஜதந்திரம் மற்றும் வெளியுறவு விவகாரங்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்