யாழில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை நடை முறைப்படுத்த நடவடிக்கை!

Date:

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை முறையான பதிவுக்கு உட்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட சேவையாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட பாடசாலை வாகனச் சங்கத் தலைவர் கோகுலம் தலைமையில், சுண்டுக்குழியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பிரிவின் இரண்டாம் நிலை அதிகாரியும் கலந்து கொண்டார்.
1999ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் பல தனியார் வாகனங்கள் இதுவரை முறையான பதிவுக்கு உட்படாமல் சேவையாற்றி வந்துள்ளன. அதேவேளை, மாவட்டத்தில் இயங்கி வந்த சங்கமும் பதிவு செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில், சேவையை முறைப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள தாய்ச் சங்கத்தின் பிரதிநிதிகளால் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைக்கான நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் பதிவு தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இதனடிப்படையில், யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் வாகன உரிமையாளர்களுக்கும் சங்கத்தின் ஊடாக தேவையான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் போக்குவரத்துச் சேவையைப் பாதுகாப்பானதாகவும், பொறுப்புமிக்கதாகவும், முறையான அங்கீகாரத்துடனும் முன்னெடுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்