இனி ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கருக்கலைப்பு செய்து கொள்ள பல நாடுகளில் தடை இருந்து வருகிறது. மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்னரே இந்த நாடுகளில் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையிலிருந்து வரும் கருக்கலைப்பு சட்டவிரோதம் என்ற சட்டத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலும் அமல்படுத்தியுள்ளனர். டெக்ஸாஸ் மாகாண புதிய கருக்கலைப்பு சட்டப்படி, கருவில் சிசுவின் இதயத்துடிப்பு உணரப்பட்ட காலத்திற்குப் பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதி கிடையாது.
கருக்கலைப்பு செய்வதாக இருந்தால் அதற்கு முன்னரே செய்து கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதயத்துடிப்பை உணர 6 வாரங்கள் ஆகலாம். இந்த 6 வாரக் காலகட்டத்திற்குள் தாங்கள் கருவுற்றிருக்கிறோம் என்பதே பெரும்பாலான பெண்களுக்குத் தெரியாது. அப்படியிருக்கும் போது இவ்வளவு கடுமையான சட்ட நடைமுறை எங்களுக்கு ஒத்துவராது, இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பெண்கள் தரப்பில் சிலர் முறையிட்ட நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அரசின் முடிவில் தலையிட முடியாது என ஒதுங்கிக் கொண்டது. இதையடுத்து டெக்ஸாஸ் மாகாணத்தில் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இனி ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட வேண்டாம் என நூதன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பெண்களுக்கு நடிகையும், பாடகியுமான பெட்டே மிட்லர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
I suggest that all women refuse to have sex with men until they are guaranteed the right to choose by Congress.
— bettemidler (@BetteMidler) September 3, 2021
ட்விட்டர் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கருக்கலைப்பு சட்டத்தை அரசு திருத்தும் வரையில் ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடாமல் செக்ஸ் ஸ்டிரைக்கில் பெண்கள் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பலர் அங்கு செக்ஸ் ஸ்ரைக்கில் ஈடுபட்டுள்ளனராம்.