தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி

Date:

தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது

தென்கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர் என தென்கொரிய  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் இருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம், முகான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

175 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களுடன் சென்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

தாயின் தாலிக்கொடியை திருடி காதலனிற்கு கொடுத்த பணம்; உறவுப்பெண் மீது பழிபோட்டு நாடகம்: வங்கி ஊழியரான 22 வயது யுவதி கைது!

மட்டக்களப்பில் காதலனுக்காக தனது தாயின் எட்டரை பவுன் தாலிக்கொடியை திருடி அதனை...

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்