தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் (DIGs) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, அரச புலனாய்வு சேவையின் பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய எச்.கே.ஆர். பெர்னாண்டோ, பொலிஸ் விசேட பிரிவின் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, பொலிஸ் நலன்புரிப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த டபிள்யூ.யு. கினிகே, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பாக இருந்த கே.ஏ.ஜே. கொடிதுவக்கு, பொலிஸ் நலன்புரிப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கேகாலை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ஓஷான் ஹேவவிதாரண யாழ்ப்பாணப் பிரிவிற்கும், யாழ்ப்பாணப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ஜி.எச். மாரபன களுத்துறைப் பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறைப் பிரிவின் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய டபிள்யூ.ஜே. பத்மினி, கேகாலை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்கள் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.




