விஸ்வாசம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினி. ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு முழுதும் முடியாமல் 10 நாட்காளான வேலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது எல்லோரும் போல் வீட்டில் இருந்தபடியே இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
இந்த நிலையில் ஏற்கனவே ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது தல அஜித் நடிக்கும் வலிமை படம் கூட தீபாவளிக்கு வெளியாகும் என ஒரு தகவல் வந்துள்ளது. மேலும், படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே எடிட்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் படம் ஓரளவுக்கு முடிந்துவிட்டது.
கடந்த மே 10 ஆம் தேதியிலிருந்து ரஜினியின் காட்சிகளை படமாக்கி முடித்து விட்டார் இயக்குநர் சிவா. படப்பிடிப்பின் கடைசி நாளன்று ரஜினி, படக்குழுவினரிடம் அண்ணாத்த படத்தைப் பற்றி சிலாகித்து கூறியுள்ளார். அதாவது, “இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன், ஆனால் உடல் ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை, அண்ணாத்த படம் நல்லபடியாக முடிந்து இருக்கிறது. இந்தப்படம் என் கரியரில் முக்கியமான படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினி.