முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நிதி அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ்!

Date:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஒக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுவரை திரைத்துறையில் ஆண் திரை பிரபலங்கள் மட்டுமே நன்கொடை அளித்துள்ள நிலையில், தற்போது முதல் நடிகையாக நிதி அகர்வால்  நன்கொடை அளித்துள்ளார்.


தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் வேலையின்றி கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ஃபெப்சி அமைப்புக்கும் ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்