பிக் பாஸுக்கு முன்பே படத்தில் நடித்துவிட்டேன்: பாலாஜி முருகதாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்!

Date:

பிக் பாஸ் 4 வீட்டுக்குள் போட்டியாளராக செல்லும் முன்பே தான் ஒரு MMA படத்தில் நடித்து முடித்ததாகவும், அதன் ரிலீசுக்காக தற்போது காத்திருப்பதாகவும் பாலாஜி முருகதாஸ் கூறி உள்ளார்.

பிக் பாஸ் 4ம் சீசனில் இரண்டாம் இடம் பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். அவர் தான் ஒரு படத்தில் நடித்து முடித்திருப்பதாக கூறி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாலாஜி முருகதாஸ். அவர் மிஸ்டர் இந்தியா பட்டம் ஜெயித்தவர் என்கிற அடையாளத்தோடு தான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். தான் இது போன்ற போட்டிகளில் ஜெயித்தபோதும் மீடியா தன்னை கண்டுகொள்ளவில்லை என வருத்தத்துடன் அவர் முதல் நாளில் பேசி இருந்தார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் செய்த சில மோசமான விஷயங்களால் அதிகம் விமர்சனங்களை சந்தித்தார் பாலாஜி. இருப்பினுக்கும் அவருக்கும் ரசிகர்கள் கிடைத்தார்கள். பிக் பாஸ் டைட்டிலை ஆரி ஜெயித்த நிலையில், பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடம் பிடித்தார். மற்ற போட்டியாளர்களை விட பாலாஜிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததே பெரிய ஆச்சர்யம் என பலரும் கூறினார்கள்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை பற்றி பாலாஜி தெரிவித்து உள்ளார். தான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே MMA எனப்படும் மிக்ஸட் மார்சியல் ஆர்ட்ஸ் படம் ஒன்றில் நடித்து முடித்திருப்பதாக கூறி உள்ளார்.

அந்த படத்தின் ரிலீசுக்காக தான் தற்போது அவர் காத்திருக்கிறாராம். இந்த தகவலை ரசிகர் ஒருவரது கேள்விக்கு பதிலாக கொடுத்திருக்கிறார் பாலாஜி.

மேலும் பிக் பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ் ஷிவானி நாராயணன் உடன் நெருக்கம் காட்டியது அனைவருக்கும் தெரியும். பிக் பாஸுக்கு பிறகு வெளியிலும் அவர்கள் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் ஷிவானி பிறந்தநாளை பாலாஜி உடன் தான் கொண்டாடி இருந்தார், வேறு எந்த பிக் பாஸ் நண்பர்களும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘நீங்க சிங்கிளா இல்லை கமிட்டடா?’ என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு ‘சிங்கிள்’ என்று மட்டும் பாலாஜி பதிலளித்து உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா கேட்ட கேள்வியான ‘அன்பு ஜெய்க்கும்னு நம்புரியா?’ என்ற் கேள்வியை ரசிகர் பாலாஜியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ‘சும்மா இருடா’ என்று பதில் கூறியுள்ளார் அவர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்