சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி, பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் (Sri Lankan High Commission) முன்னால் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலிருந்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகமான 10 Downing Street நோக்கி மாபெரும் போராட்ட ஊர்வலமாகச் சென்று, உறவுகளுக்கான நீதியையும் இப்படுகொலை நாடக அரங்கமும் இடம்பெற்றது
எமது உறவுகள் எங்கே?
அவர்களுக்கு என்ன நடந்தது?
உண்மை வெளிவரும் வரை…
நீதி கிடைக்கும் வரை…
எமது போராட்டம் தொடரும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
நிகழ்வில் இனப்படுகொலைகளை மற்றும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை சித்தரிக்கும் வகையில் வீதி நாடக அரங்குகளும் காட்சிப்படுத்தப்பட்டது
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்




