100 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வச்சந்நிதி, கதிர்காமம் ஆலையங்களில் மூலஸ்தானத்தில் இருந்து இரு வேல்களுடன் சங்கரன் அடிகளார். அருணன் கதிர்காமத்தை நோக்கி பாதையாத்திரை

0
9

100 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வச்சந்நிதி, கதிர்காமம் ஆலையங்களில் மூலஸ்தானத்தில் இருந்து இரு வேல்களுடன் சங்கரன் அடிகளார். அருணன் கதிர்காமத்தை நோக்கி பாதையாத்திரை

இலங்கையில் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முதலாக கதிர்காம ஆலையத்தின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு  வேலும் யாழ் செல்வச்சந்நிதி ஆலைய மூலஸ்தானத்தில் வைக்கப்பட்ட வேலுமாக இரு வேல்களுடன் சங்கரன் அடிகளுடன் கதிர்காமத்தைச் சேர்ந்த சிங்கள இனத்தையுடைய அருணன் என்பவர் உட்பட இருவர்களும் செல்வச்சந்நிதி ஆலையத்தில் இருந்து கதிர்காமத்திற்கு இரு வேல்களுடன்  பாதை யாத்திரையை ஆரம்பித்து மட்டு மாமாங்கத்தை  நேற்று புதன்கிழமை(17) வந்தடைந்துள்ளனர்

கடந்த 15 வருடமாக செல்வச்சந்நிதி முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்துக்கான பாதை யாத்திரையை மேற்கொண்டுவருவதுடன் கடந்த 9 வருடங்களாக ஊதந்தை முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்துக்கான காட்டுவழி பாதையை முதல் முதலாக ஆரம்பித்து வருகின்றதாக பாக்கியம் கிடைத்துள்ளதாகவும் இந்த வருடம் இரு ஆலைய வேல்களுடன் காட்டுவழிபாதை திறக்ப்பின் போது முதல் முதல் கிடைக்கும் என நம்புவதாக சங்கரண் அடிகளார்  தெரிவித்தார்

அதேவேளை கடந்த வருடம் செல்வச்சந்நி ஆலையத்தில் இருந்து பாதையாத்தை ஆரம்பித்த ஒரு குழுவின் தலைவராக செயற்பட்டவர் கதிர்காமத்தில் பக்தர்களின் தங்க ஆபரணங்கள் பணம் திருடடி போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு இடம் பெற்று வருகின்றதுடன் அவர் செல்வ சந்நிதியில் 5 தடவைகள் திருட்டில் ஈடுபட்டபோது ஆலைய நிர்வாகம் பிடித்துள்னர் அதேஆவளை மதுபானங்களையும் மீட்டனர்.

இவ்வாhறு முறைகேடாகவும் தீட்டில் ஈடுபட்டவர்களும் பாதை யாத்திரை குழு வில் ஈடுபடுவது சைவத்துக்கும் தமிழுக்கும் இழுக்கு எனவே பக்த அடியார்களே  இந்த பாதையாத்திரை என்ற பெயரில் திருட்டில் ஈடுபடுபவர்களை இனம் கண்;டு அன்னதானம் வழங்கவும்.

அதேவேளை இந்த திருட்டு செயற்பாட்டினால் அந்த பாதை யாத்திரை குழுவினை செல்வ சந்நிதியான் ஆலையத்திற்கு ஆலைய நிர்வாகம் அனுமதிக்கவில்லை  என்பதுடன் செல்வ சந்நிதி ஆலைய மூலஸ்தானத்தில் வைக்கப்பட்ட முருகவேல் ஆலைய குருக்கள் சுரேஸ்குமார் குருக்கள் மற்றும் சாரங்கள் ஜயாவின் வழிநடத்தலில் என்னிடம் வழங்கப்பட்டது அதேவேளை கதிர்காமத்தில் ஆலையத்தில் மூலஸ்தானத்தில் இருந்து சுதுமாத்தையா , கப்புறாளை ஆகிய இருவரால் அருணன் என்றவரிடம் வழங்கப்பட்டு இந்த இரண்டு ஆலைய வேல்களுடன் நாங்கள் இருவரும் செல்வ சந்நிதியில் இருந்து பாதையாத்திரை ஆரம்பித்துள்ளோம் எனவே பக்தர்கள் இந்த இரு வேல்களையும் தரிசிக்கவும். என சங்கரன் அடிகளார் தெரிவித்தார்.