மேலும் 13 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலமுன்ன மற்றும் மாம்பே மேற்கு கிராம சேவகர் பிரிவுகள்,

கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலபிட்டிவல நவ மஹர கிராமம் மற்றும் மகுல் பொகுன கிராமத்தின் மகுல் பொகுன வீதி கிராம சேவகர் பிரிவுகள்,

காலி மாவட்டத்தின் இமதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டானிகத கிராம ​சேவகர் பிரிவுகள்,

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சன்னஸ்கம, தொட்டகஸ்வின்ன மற்றும் கொடகம கிராம சேவகர் பிரிவுகள்,

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியவெவ நகர் கிராம சேவகர் பிரிவு,

கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபொத்த மற்றும் கெந்தாவ கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுஅக்கல மற்றும் பொல்ஹேள கிராம சேவகர் பிரிவுகளுக்கு மற்றும் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்