தெல்லிப்பளை வைத்தியசாலைக்குள் புகுந்த ‘சொர்ணாக்கா’ விவகாரம்: சுகாதாரத்துறை கலந்துரையாடலில் எடுத்த முக்கிய முடிவுகள்!

Date:

தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் நாளை (2) தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை உயரதிகாரிகளின் கலந்துரையாடலை தொடர்ந்து புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

நாளை 2025 வைகாசி 2 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 2025 வைகாசி 3 ஆம் திகதி காலை 8.00 மணி வரையிலான தொழிற்சங்க நடவடிக்கை தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், தெல்லிப்பளை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளை உறுப்பினர்களை விவாதிக்க அழைத்திருந்தார்.

இந்த கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், தெல்லிப்பனை மருத்துவ அத்தியட்சகர், தெல்லிப்பளை வைத்தியசாலை திட்டமிடல் மருத்துவ அதிகாரி, மாகாண சுகாதார அமைச்சின் பிரதிநிதியாக சிரேஷ்ட உதவி சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளைத் தலைவர், செயலாளர் மற்றும் வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும்  கொண்டனர்.

இவ்விவாதத்தில் இரண்டு முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

1.மருத்துவர் மற்றும் அன்றைய தினம் கடமையிலிருந்த சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவமனை வைத்திய அத்தியட்சகர் காவல் துறையில் முறைப்பாடு அளிக்க வேண்டும். அத்துடன்தெல்லிப்பளை வைத்திய அத்தியட்சகர் அவர்கள் பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் இணைந்து போலீசில் முறைப்பாடு அளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாகாண சுகாதார அமைச்சு இந்த வழக்கை பொறுப்பேற்று தொடர்ந்து செயலாற்றும்.

2. தெல்லிப்பளை வைத்திய அத்தியட்சகர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய மாகாண சுகாதார அமைச்சு நாளை விசாரணைக் குழுவை நியமிக்கும்.

விசாரணை தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதத்தை பெற்றவுடன், தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக பிற்போட முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே தீர்மானித்த படி மறு அறிவித்தல் வரை தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் தொழிற்சங்க நடவடிக்கை நாளை காலை 8.00 மணி முதல் தொடரும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி

வலிகாமம் வடக்கில் சொகுசு ஹொட்டல் ஒன்றை நிர்மாணிக்கும் புத்தளத்தை சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் தாயார் யாழ்ப்பாணம் வந்தபோது திடீர் சுகவீனமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஆரம்ப சிகிச்சையளித்த பின்னர் அவரது உடல்நிலை சீராக காணப்பட்டதையடுத்து, அவரை சாதாரண விடுதிக்கு மாற்ற வைத்தியர்கள் தீர்மானித்தனர். அப்போது, அந்த பெண்ணின் உதவியாளராக வந்த மற்றொரு பெண், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியசாலைக்குள் களேபரத்தில் ஈடுபட்டு, வைத்தியசாலைக்குள் குழப்பம் விளைவித்தார்.

அத்துடன், சிகிச்சை பெற்ற பெண்ணை திருநெல்வேலி தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டனர்.

சொர்ணாக்கா பாணியில் குழப்பத்தில் ஈடுபட்ட பெண் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு முறையிட்ட போதும், வைத்திய அத்தியட்சகர் அது தொடர்பில் செயற்படவில்லை. இதனால் மருத்துவர் ஒருவர் தெல்லிப்பளை பொலிசில் முறையிட்டார்.

குறிப்பிட்ட வர்த்தகர் வடக்கு உயர் பொலிஸ் அதிகாரியின் நண்பர் என்றும், அதனால் பொலிசார் நடவடிக்கையெடுக்கவில்லையென்றும் மருத்துவர்கள் குற்றம்சாட்டினர்.

இதேவேளை, சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பமாக- மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் நோயாளி பாதிக்கப்பட்டார் என்ற தோரணையில் விசாரணை அறிக்கை கோரியிருந்தார். அரசியல், அதிகார செல்வாக்கினால் விடயம் திசைதிருப்படுவதாக தெரிவித்து மருத்துவர்கள் தொழிற்சங்க போராட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து, இன்றைய கூட்டம் கூட்டப்பட்டது. இதில் வைத்தியசாலை சார்பில் வைத்திய அத்தியட்சகரே பொலிசில் முறையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்