யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகள் 3 மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என்று 28.03.2025 திகதியிட்ட 2430 இலக்கமிட்ட வர்த்தமானியில் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரமாகியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 3669 ஏக்கர் காணிகளும், முல்லைமாவட்டத்தில் 702 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 515 ஏக்கர் காணிகளுமாக 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்வதற்கான வர்த்தமானி அறித்தல் வெளியாகியுள்ளது.
யாழ் மாவட்டத்தின்மருதங்கேணி பிரதேசசெயலாளர் பிரிவு முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகள், மற்றும் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் வரையான கரையோர பகுதிகளே அரசினால் குறிவைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணியும் அவ்வாறு வர்தமானியிடப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளிலுள்ள அரச நிலம் எது, தனியார் காணிகள் எவை என்பது தெரியாததாலேயே இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தல் நெருங்கும் சமயத்தில் யாழில் சில வீதிகளை கட்டுப்பாட்டுடனும் மிகச்சிறிய காணிகளையும் பகிரங்கமாக விடுவித்துள்ள ஜேவிபி அரசு, இரகசியமாக ஆயிரக்கணக்கான தமிழர் நிலங்களை சுவீகரிக்க இரகசிய நடவடிக்கையடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.






















