மிச்ச காசு கேட்ட பயணியை கேட்ட வார்த்தையால் திட்டிய நடத்துனர்!

Date:

யாழ்ப்பாணம் வவுனியா போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தூசண வார்த்தைகளில் பேசியதுடன் அவரை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று மாலை 3.50 மணிக்கு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் வவுனியாவில் இருந்து பயணியொருவர் பயணித்துள்ளார்.

இவர் பேருந்து கட்டணமாக 260 ரூபாவுக்கு 1000 ரூபா தாளை கொடுத்துள்ளார். இதன்போது நடத்துனர் மீதிப் பணமாக 235 ரூபாவை கொடுத்துவிட்டு மீதி 500 ரூபா பின்பு தருவதாக கூறியுள்ளார்.

எனினும் யாழ்ப்பாணத்தை வந்தடைவதற்குள் இரண்டு மூன்று முறை மீதிப் பணத்தை கேட்ட போதும் பின்பு தருவதாக கூறியுள்ளார்.

இறுதியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின்பு, மீதிப் பணமாக 5 ரூபாவை கொடுத்துள்ளார். இதன்போது அப் பயணி மீதிப் பணம் 505ரூபா தர வேண்டும் என கேட்ட போது, அதற்கு நடத்துனர் இல்லை, 5 ரூபா தான் தர வேண்டும், நீ 500 ரூபா தான் கொடுத்தாய் என அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பயணியும் தான் 1000 ரூபாவே கொடுத்ததாகவும், மீதிப் பணம் 500 ரூபா தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு சாரதியும் நடந்துனரும் இணைந்து, பயணியை அச்சுறுத்தியுள்ளார்.

பணத்தை தராவிட்டால் என்ன செய்வாய் ? பொலிஸுக்கா செல்வாய் ? முடிந்தால் செல் என அச்சுறுத்தியுள்ளனர்.

எனினும் தொடர்ச்சியாக பயணி மீதிப்பணத்தை தராவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூற, பயணியின் பேருந்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு மீதிப் பணத்தை கொடுத்துவிட்டு அவரை தூசண வார்த்தைகளில் பேசியுள்ளனர்.

இதேவேளை இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தனியார் பேருந்துகளில் இடம்பெறுவதாகவும், அவற்றை கேட்கப்போனால் நடத்துனர்கள் அச்சுறுத்துவதாகவும் ஏனைய பயணிகளும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்