28.9 C
Jaffna
February 20, 2025
Pagetamil
இலங்கை

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் காயம்

மின்னேரிய வீதியின் 7வது மைல்கல் பகுதியில் இன்று (29) காலை 11 மணியளவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துமே குறித்த விபத்திற்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது மருத்துவமனை மற்றும் ஹபரணை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து, கட்டுநாயக்காவில் இருந்து சிறிபுர பகுதியில் உள்ள மரண வீடொன்றுக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகங்களுக்கு பேச வேண்டாம்” என NPP கூறியதாக NPP பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு தெரிவிப்பு

east tamil

சாவகச்சேரியில் தாக்கப்பட்ட முதியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Pagetamil

சாரதியை ‘கழுதை’ என அழைத்த அமைச்சர்!

Pagetamil

பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் கிளீன் செய்யப்பட வேண்டும்

east tamil

தினக்குரல் பத்திரிகையின் நிறுவுனர் எஸ். பி. சாமி காலமானார்

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!