அர்ச்சுனா எம்.பி கைது!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

பின்னர் அனுராதபுரம் பொலிஸார் இந்த விடயம் குறித்து விசாரணைகளைத் தொடங்கி, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்