நிதி இன்மையால் நீர் கொழும்பில் இடம்பெறும் தேசிய போட்டிக்கு அழைத்துச் செல்லப்படாத கிளிநொச்சி வீரர்கள்

Date:

நிதி இன்மையால் நீர் கொழும்பில் இடம்பெறும் தேசிய போட்டிக்கு அழைத்துச்
செல்லப்படாத கிளிநொச்சி வீரர்கள்

இருவர் பங்குபற்றும் கடற்கரை கைப்பந்து (Beach volleyball) தேசிய
போட்டிக்கு கிளிநொச்சி வீரர்கள் இருவர் அழைத்துச் செல்லப்படமை சமூகத்தில்
கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த புதிய பாரதி விளையாட்டுக்
கழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் கரைச்சி பிரதேச செயலக பிரிவு,
கிளிநொச்சி மாவட்டம், வடக்கு மாகாண மட்டங்களில் மேற்படி போட்டிகளில்
பங்குகொண்டு வெற்றியீட்டியுள்ளனர்.

இவர்களுக்கான தேசிய போட்டி நீர்கொழும்பில் நேற்று வெள்ளிக் கிழமை
ஆரம்பித்து சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் இடம்பெறுகிறது. இந்தப்
போட்டிக்கு கிளிநொச்சியிலிருந்து முதன் முதலாக மலையாளபுரம் புதிய பாரதி
விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பங்குபற்ற வேண்டும்
ஆனால் அவர்கள் உரிய அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படவில்லை.

எனவே ஏன் தேசிய போட்டிக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என சம்மந்தப்பட்ட
அதிகாரிகள் சிலரிடம் வினவிய போது நீர்கொழும்பில் மூன்று நாட்கள்
தங்கயிருக்க வேண்டும் ஒரு நாள் தங்குமிட செலவு 8500 ரூபா
தேவைப்படுகிறது. ஆனால் குறித்த நிதி வசதி ஏற்பாடு செய்து தரப்படவில்லை
இதன் காரணமாக தேசிய போட்டிக்கு வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட
இரண்டு வீரர்களை அழைத்துச் செல்லமுடியாதுபோய்விட்டது எனத் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தேசிய போட்டிக்குச் செல்வது என்பதே
சாதனைக்குரிய விடயம் இந்த நிலையில் வடக்கு மாகாணத்தை
பிரதிநிதித்துவப்படுத்தி கடற்கரை கைபந்து போட்டிக்கு வீரர்களை அழைத்துச்
செல்லப்படாமையானது மக்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு தாங்கள் குறித்த போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் அணி என்றும்
ஆனால் தொடர்ச்சியாக பாரபட்சத்திற்குள்ளாக்கப்பட்டு வருகின்றோம். பல்வேறு
நெருக்கடிகள் எம்மீது மேற்கொள்ளப்படுகிறது.எமது அணியில் விளையாடுகின்ற
வீரர் ஒருவர் ஸ்ரீஜெயவர்த்தனபர பல்கலைகழகத்தில் விளையாட்டு
முகாமைத்துவத்தில் கற்கும் மாணவன் பல்கலைகழத்தில் பல விளையாட்டுகளில்
பங்குபற்றி ஏராளமான சான்றிதழ்கள், பதக்கங்களையும் வென்றவர். அவருடன்
பல்கலைகழகத்தில் விளையாடியவர்களே ஏனைய மாகாணங்களை
பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டியில் பங்குபற்றுகின்றனர் எனவும்
அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...

யாழில் மகளை சீரழித்த தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்