26.9 C
Jaffna
February 28, 2025
Pagetamil
விளையாட்டு

கொரோனா வைரஸ் தடை காரணமாக ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் இந்திய தடகள அணி!

கொரோனா வைரஸ் தடை காரணமாக இந்திய தடகள அணி போலந்தில் நடக்கும் உலக தடகள ரிலே போட்டிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறது.வரும் மே 1 மற்றும் 2 தேதிகளில் உலக தடகள போட்டிகள் போலாந்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு டச்சு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனால் இந்திய தடகள அணியில் போலந்தில் நடக்கும் உலக தடகள போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உலக தடகள போட்டிகளில் பங்கேற்கும் பெண்கள் 4* 100 மீட்டர் அணி, ஆண்கள் 4* 400 மீட்டர் அணியும் இந்தியாவிலிருந்து நாளை ஆம்ஸ்டர்டம் செல்ல இருந்தது. இந்நிலையில் டச்சு அரசாங்கம் தற்போது இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் இந்திய அணி வீரர்களால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்திய தடகள கூட்டமைப்பு இதற்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய அனைத்து விதத்திலும் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக தடகள இந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் சுமாரிவாலா கூறுகையில், “இந்த நிலையில் எங்களுக்கு இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்தியாவில் இருந்து நேரடி விமானங்கள் போலாந்திற்கு இல்லாத நிலையில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்வதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். ஆனால் கடந்த 24 மணி நேரமாக உலக தடகள கூட்டமைப்பு ஏற்பாட்டாளர்கள் யாரும் எந்த விதத்திலும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. இது ஏமாற்றமளிக்கிறது”என்றார்.

இந்நிலையில் உலக தடகள போட்டிகளில் முதல் 8 இடங்களை பெறும் அணிகள் நேரடியாக டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும். பெண்கள் 4* 400 மீட்டர் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் இருவருக்கு மேல் உடற்தகுதி இல்லாத நிலையில் அவர்கள் ஏற்கனவே பின்வாங்கி விட்டனர். இதற்கிடையில் இந்தியாவைச் சேர்ந்த கலப்பு 4* 100 மீட்டர் ரிலே அணி ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு கடந்த 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் தகுதி பெற்றது.

இந்நிலையில் பெண்கள் 4* 100 மீட்டர் ரிலே அணி இந்த போலாந்து போட்டி மூலமாக தகுதி பெறும் என்ற நம்பிக்கையில் இந்திய தடகள கூட்டமைப்பு இருந்தது. ஆனால் தற்போது அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் ஏமாற்றத்தை இந்திய ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியில் ஹிமா தாஸ், டுடே சந்த், தனலட்சுமி சேகர், அர்ச்சனா சுசீந்திரன், தியானேஸ்வரி மற்றும் ஹீமாஸ் ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதேபோல ஆண்கள் 4* 400 மீட்டர் ரிலே அணியில் முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜீவ், அமோஜ் ஜாக்கப், நிர்மல் டாம் மற்றும் சரத் பாம்ரே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

east tamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!