ரிங்கு சிங்கிற்கும், வழக்கறிஞரும், எம்பியுமான பிரியா சரோஜ்க்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின.
ஆனால் இருவரும் இதுதொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இந்நிலையில் எம்.பி பிரியா சரோஜின் தந்தை, தனது மகளுக்கும், ரிங்கு சிங்கிற்கும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றும் ரிங்கு சிங்கின் பெற்றோர் தரப்பில் இருந்து ரிங்கு சிங்கிற்கு தங்களது பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் மட்டும் தெரிவித்திருந்தனர் என்றும் கூறியிருக்கிறார்.




