கடந்த 24 மணித்தியாலத்தில் புத்தளத்தில் அதிக மழை

Date:

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக குளியாப்பிட்டிய பகுதியில் 193.0 மில்லிமீற்றர், இலுப்பைக்கடவை பகுதியில் 187.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ‘அர்னாப்’ (ARNAB) சூறாவளி தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கு மறைமுகமான தாக்கம் ஏற்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் வடக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஜோன்ஸ்டன்

பதிவு செய்யப்படாத மற்றும் போலியான இலக்கத் தகடுகளைக் கொண்ட பிஎம்டபிள்யூ (BMW)...

வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கோட்டா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்