யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மானிப்பாய் சென் பீட்டர்ஸ் வீதிக்கு அருகில் உள்ள இடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, 24 மற்றும் 26 வயதுடைய நபர்கள் 500 போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளனர்.




