ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Date:

ஐ.எம்.எல் டி20 கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) போட்டியில், இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 15 பேர் கொண்ட குழாம் குமார் சங்கக்காரின் தலைமையில் பங்கேற்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தொடரில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இம்மாதம் 22ம் திகதி தொடங்கும் இந்த போட்டிகள், மார்ச் 16ம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளன.

இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஷேன் வொட்சன், இங்கிலாந்து அணியின் தலைவராக இயோன் மோர்கன், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக பிரையன் லாரா, தென்னாபிரிக்கா அணியின் தலைவராக ஜாக் காலிஸூம் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக், தடைப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் மீண்டும் பங்கேற்பதற்கான மிக முக்கியமான தொடர் என கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்