இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

Date:

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இங்கினியாகலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி இரவு இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அம்பகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரிடமிருந்து 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், கமுனுபுர பகுதியைச் சேர்ந்த மற்றொரு 21 வயதுடைய இளைஞரிடமிருந்து மேலும் 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.

அவர்களுக்கு போதைப்பொருளை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் பொல்வகா குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரதான சந்தேகநபர் 2,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும் ரூ.14,700 பணமும் அவரது வசமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஹேஷ் சேனாரத்னவின் ஆலோசனைக்கமையவும், அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரையின்படியும் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை பிரிவு பதில் அதிகாரி உதவி பொலிஸ்மா அதிபர் நுவன் தந்தநாராயணவின் நேரடி கண்காணிப்பிலும், உதவி பொலிஸ்மா அதிபர் பண்டார திஸாநாயக்க மற்றும் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தனுஷ்க ரத்நாயக்க ஆகியோரின் வழிகாட்டலிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கர தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சாரதி உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக இங்கினியாகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சேனக பண்டார மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்