நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

Date:

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில், வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் மெஷின் வழங்கும் உதவி திட்டம் (04.08.2026) நிந்தவூர் சி.ஓ. லெஸ்தகீர் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

சி.ஓ. லெஸ்தகீர் குடும்ப நிதியத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு தையல் மெஷின்களை வழங்கி வைத்தார்.

இதன்போது உரையாற்றிய தவிசாளர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான இத்தகைய தன்னிறைவு திட்டங்கள் சமூகத்திற்கு பெரும் பயனளிப்பவை எனக் குறிப்பிட்டார்.

மேலும், சமூக நலனில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பிற்கும், இத்திட்டத்திற்கு அனுசரணை வழங்கிய சி.ஓ. லெஸ்தகீர் குடும்ப நிதியத்திற்கும் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் பிரதான செயற்பாட்டாளரும்,  இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஓய்வு நிலை பிரதிப் பணிப்பாளருமன,  சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் ஸ்தாபகர் ஓ எல் சப்ரி இஸ்மத் அவர்களுடன்,  ஓ லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் செயற்பாட்டாளர்களான ஓய்வு நிலை சுங்க அத்தியட்சகர் எஸ் எச் முகம்மட் அலி, 3 N அச்சகத்தின் பணிப்பாளர் ரீ ஏ மஜீட், திருமதி இஷாரா இந்திகாப் அலி , ஐ.றிஸ்மி, ஆகியோர்களுடன் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்