தட்டம்மை நோய் பரவல் காரணமாக, மூன்று சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இன்று (09) நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த முடியாது என்று சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் மகசின் சிறைச்சாலை ஆகியவற்றில் உள்ள கைதிகளை இன்று நீதிமன்றங்களுக்கு அழைத்து வராதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக சுகாதார மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




