கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் யுவதியொருவரை கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்திய 4 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.
வீட்டில் தனித்திருந்த 26 வயதான யுவதியே வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த 4 பேர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து யுவதியை வல்லுறவுக்குள்ளாக்கினர்.
சந்தேகநபர்களை கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிசார், அவர்களை நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.




