சவுதியிலிருந்த வந்த பெண்ணுக்கு முல்லைத்தீவில் மதுபானம் வழங்கி கூட்டு வல்லுறவு!

Date:

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய 33 வயதுடைய பெண்ணொருவருக்குப் மதுபானம் கொடுத்து, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரிடமிருந்த தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களும் பணியாற்றிய குறித்த பெண், கடந்த 4ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பியுள்ளார். இதன்போது, தன்னுடன் வெளிநாட்டில் பணியாற்றிய கவிதா என்ற தோழியின் பொருட்கள் அடங்கிய பொதியொன்றைப் புதுக்குடியிருப்பிலுள்ள அவரது வீட்டில் ஒப்படைப்பதற்காக வாடகை வாகனமொன்றில் கொழும்பிலிருந்து பயணித்துள்ளார். இந்த வாகனத்தையும் கவிதாவே ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த வாகனத்தைத் தமிழ் சாரதியொருவர் செலுத்தியுள்ளார். பயணத்தின்போது நீர்கொழும்பு பகுதியில் தனிப்பட்ட தேவையைக் காரணம் காட்டி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சாரதி தங்கியிருந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணியளவில் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 5ஆம் திகதி அதிகாலை சுமார் 5 மணியளவில் புதுக்குடியிருப்பிலுள்ள தோழியின் வீட்டைச் சென்றடைந்த பெண், பொதியை ஒப்படைத்துவிட்டு, அதே வாகனத்தில் மீண்டும் அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துள்ளார்.

இதன்போது புதுக்குடியிருப்பு நகருக்கு அண்மையிலுள்ள பாலமொன்றுக்கு அருகில் இரு ஆண்கள் வாகனத்தில் ஏறியுள்ளனர். அவர்களிடமிருந்த மதுபானத்தை அனைவரும் பருகியுள்ளனர். அதனை அருந்திய பின்னர் தனக்குப் போதை ஏற்பட்டதாகப் பெண் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த மூவரும் பெண்ணை ஆள்நடமாட்டமற்ற வீடொன்றுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள அறையொன்றில் வைத்து சாரதியும் ஏனைய இருவரும் தன்னைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர் தனக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் நினைவில்லை எனவும், மீண்டும் நினைவு திரும்பியபோது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த தங்க நகை, தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்ட சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,323,750 ரூபா பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள ஆள்நடமாட்டமற்ற இடமொன்றில் பெண் விடப்பட்டுள்ளார். அவ்வழியாகச் சென்ற பொதுமக்களின் உதவியுடன் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில், மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்