கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஹெலியகொட பொலிஸ் பிரிவின் மோரகல சந்தி பகுதியில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (17) எஹெலியகொட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அண்டகல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 17ம் திகதி, எஹெலியகொட பொலிஸ் பிரிவின் ஹொரகொட வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த சிறுவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குற்றச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகள் முடிவுக்கு வந்ததும் சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என எஹெலியகொட பொலிஸார் அறிவித்துள்ளனர்.




