ஹட்டன- கொழும்பு வீதி ஒரு வழிப்பாதையாக திறப்பு!

Date:

மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் தடைப்பட்டிருந்த ஹட்டன் கொழும்பு பிரதான வீதியானது போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து இன்று பிற்பகல் முதல் ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேன தியகல பிரதேசத்தில் நேற்று (07) மாலை 7.45 மணியளவில் பிரதான வீதியில் மண் மற்றும் கற்களுடன் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து இன்று (08) பிற்பகல் வரை முற்றாக தடைப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அவ்வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் மாற்று வழிகளில் பயன்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பிரதான வீதியில் விழுந்த கற்களை வெடிக்கச் செய்து அகற்ற வேண்டியிருந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்