நுவரெலியாவின் மகாஸ்தோட்டப் பகுதியில் உள்ள தங்குமிடம் (cabana) ஒன்றில் இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அம்பாறைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பியுமி தில்ஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இந்த மாதம் 7-ஆம் திகதி, நுவரெலியாவின் தெரிபஹ பகுதியைச் சேர்ந்த தனது 27 வயது காதலனுடன் குறித்த தங்குமிடத்திற்கு வந்திருந்தார்.
நேற்று (10) காலை, அந்தத் தங்குமிடத்தின் உரிமையாளர், குறித்த பெண் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு நுவரெலியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர்.
காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைப் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




